இன்று பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம்!


பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று நடக்கிறது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்குப் பிறகு கூட்டப்படும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது

டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 2 நாட்கள் நடக்கும் இந்தச் செயற்குழுக் கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா இன்று உரையாற்று கிறார்.  பிரதமர் மோடி, மூத்த தலைவர்கள் ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்கள்  நாளை உரையாற்றுவார்கள் எனத் தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் பாஜ மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

இந்தத் தேசிய செயற்குழுக்கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அடுத்து வரும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் ஷாநவாஸ் ஹூசைன் கூறும்போது, பாஜகவின் தேசிய செயற்குழுவில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும். எந்தெந்த விஷயங்கள் என்று கூற இயலாது’ என்று தெரிவித்தார். 

POST COMMENTS VIEW COMMENTS