உரையாடல் மூலம் அதிகாரிகள் இந்தியை பரப்ப வேண்டும் - பிரதமர் மோடி


அன்றாட உரையாடல்கள் மூலம் இந்தி மொழியை பரப்பவேண்டும் என அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் 31வது மத்திய இந்தி குழு கூட்டம், பிரதமர் தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய மோடி, உரையாடல்களின் போது சிக்கலான வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அரசுத்துறைகளிலும், சமூகத்திலும் இந்தி மொழி பயன்படுத்தப்படும் முறைகளில் இருக்கும் இடைவெளியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கு கல்வி நிறுவனங்கள் உதவ வேண்டும் என கூறினார். அத்துடன் அன்றாட உரையாடல்கள் மூலம் அதிகாரிகள் இந்தியை பரப்ப வேண்டும் என குறிப்பிட்டார். இந்தக் கூட்டத்தில், குஜராத், அருணாச்சல பிரதேசம், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்றனர்.

Read Also -> பாலியல் வன்கொடுமை வழக்கு : நித்யானந்தாவுக்கு ஜாமீன் இல்லா பிடிவாரண்ட்

POST COMMENTS VIEW COMMENTS