இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருகிறது - அருண் ஜெட்லி


கச்சா எண்ணெய் விலை தாற்காலிகமாக உயர்ந்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அருண் ஜெட்லி, பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு சர்வதேச பொருளாதார மாற்றங்களே காரணம் என்றும் கூறியுள்ளார். இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அச்சத்தில் இருந்து வெளியே வரவேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுவானதாகவோ, பலவீனமானதாகவோ இல்லை என குறிப்பிட்டுள்ளார். 

இந்திய ரூபாயின் மதிப்பின் தற்போதைய நிலைக்கு உலக நிலவரமே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருப்பதாகவும், விலை உயரும் போது தற்காலிக பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்தார். உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை திடமான நடவடிக்கையாக இருக்காது எனவும் அவர் கூறினார்.

Read Also -> தன்பாலின உறவு குற்றமல்ல : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

POST COMMENTS VIEW COMMENTS