டெல்லியை குலுக்கிய மாபெரும் விவசாயிகள், தொழிலாளர்கள் பேரணி


கடன் தள்ளுபடி, தொழிலாளர் சட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள், தொழிலாளர்கள் பேரணி சென்றனர். 

ராம்லீலா மைதானத்தில் இருந்து புறப்பட்ட இந்தப் பேரணியில், சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் பேரவை, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பங்கேற்றன. நாடுமுழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்‌. பேரணியில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதும் இருந்து ஏராளமான விவசாயிகள், தொழிலாளர்கள் நேற்று காலை முதலே டெல்லிக்கு வரத் தொடங்கினர்.

      

இந்தப் பேரணியின் ஆயிரக்கணக்கான பெண்களும் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    

முன்னதாக, விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக் கோரியும், விவசாயப் பொருட்களுக்கு உரிய விலை வேண்டியும் மகாராஷ்டிராவில் மாபெரும் பேரணி நடைபெற்றது. பல கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்து தலைநகர் மும்பையை விவசாயிகள் வந்தனர். மார்ச் மாதம் நடைபெற்ற இந்தப் பேரணி மாபெரும் வெற்றி பெற்றது. மகாராஷ்டிரா அரசும் அவர்களுடைய கோரியை நிறைவேற்றுவதாக கூறியது.

POST COMMENTS VIEW COMMENTS