கொல்கத்தாவில் பாலம் இடிந்து 5 பேர் உயிரிழப்பு?


கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்திருக்கலாம் என முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

மேற்கவங்க மாநிலம் தெற்கு கொல்கத்தாவில் உள்ள மஜேர்ஹட் பாலம் திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இப்பாலம் பழைமையானது என்பதால் அதன் அருகே புதிய பாலத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கனமழை காரணமாக பழைய பாலம் இடிந்து விழுந்துள்ளது. இதில் 5 பேர் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு போலீசார், தீயணைப்பு படையினர் விரைந்துள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

POST COMMENTS VIEW COMMENTS