ஆட்டோவை விட விமானக் கட்டணம் குறைவு: மத்திய அமைச்சர் பேச்சு..!


ஆட்டோ கட்டணத்தை விட விமானக் கட்டணம் குறைவு என மத்திய விமானத்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா பேசியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் விமானநிலையத்தில் புதிய உள்நாட்டு முனையத்தை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர் ஆட்டோ கட்டணத்தைக் காட்டிலும், விமானக் கட்டணம் மலிவாகி விட்டதாகத் தெரிவித்தார்.

விமானத்தில் கிலோ மீட்டருக்கு 4 ரூபாய் என்ற அளவிலேயே கட்டணம் இருப்பதாகவும், ஆட்டோ கட்டணத்துடன் ஒப்பிட்டால் இது குறைவே என்றும் தெரிவித்துள்ளார். 2013-ஆம் ஆண்டு வரை ஏறக்குறைய ஆறு கோடி பேர் மட்டுமே விமானத்தில் சென்றதாகவும், தற்போது அது இரு மடங்கு உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS