'சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவுக்கு வாய்ப்பில்லை' - தேவஸ்வம் அறிவிப்பு


சபரிமலை பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு ஏற்படுத்துவது சாத்தியமில்லை என்று திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது. 

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கேரளா மட்டுமின்றி, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் வருகை தருகின்றனர். குறிப்பாக சீசன் சமயங்களில் கூட்டம் அலைமோதும். இதனால் ஆன்லைனின் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்துமாறு தேவஸ்வம் போர்டுக்கு கேரள காவல்துறை வலியுறுத்தியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்களை சபரிமலை கோயிலுக்குள் அனுமதிப்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்று கூறி காவல்துறையின் கோரிக்கையை திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு நிராகரித்து விட்டது.

Read Also -> பசுவை மருத்துவரிடம் அழைத்துச்சென்ற முதியவர் கை உடைப்பு

POST COMMENTS VIEW COMMENTS