'ஊழல் அதிகாரிகள் மீது விரைவு நடவடிக்கை தேவை' : ஊழல் கண்காணிப்பு ஆணையம்


முறைகேடுகளில் ஈடுபடும் மத்திய அரசு ஊழியர்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊழல் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு சில அறிவுறுத்தல்களையும், பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது. அதில், மத்திய அரசு ஊழியர்கள் ஊழல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடும்போது நீதிமன்றங்களில் விசாரணை நடைபெற்றால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நெடுங்காலம் அவர்கள் பணிகளில் தொடர்வதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும்போது, துறை ரீதியாகவும் விசாரணை நடத்தி குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கலாம் என மத்திய அரசு துறைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் முறைகேடுகளில் ஈடுபடும் மத்திய அரசு ஊழியர்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS