எம்.பி. பதவி முடிந்தும் தொடரும் வங்கிக் கணக்குகள் 


எம்.பி.க்கள் தொகுதி நிதிக்காக தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகள், மக்களவை பதவிக் காலம் முடிந்தபிறகும் முடிக்கப்படாமல் இருப்பதாக மத்திய புள்ளிவிவரத்துறை தெரிவித்துள்ளது.

தற்போது 16ஆவது மக்களவை நடைபெற்று வரும் நிலையில், 14 மற்றும் 15ஆவது மக்களவை உறுப்பினர்களுக்கு தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகள் இன்னும் முடிக்கப்படாமல் இருப்பதாக தெரிய வந்துள்ளது. மக்களவையின் பதவிக் காலம் முடிந்து 18 மாதங்களில் தொகுதி மேம்பாட்டு நிதியில் பணிகளை முடிக்க விதிமுறை உள்ளது. 

மேலும், அடுத்த 3 மாதங்களில் வங்கிக் கணக்கு முடிக்கப்பட வேண்டும் என விதிமுறை உள்ளதாக புள்ளிவிவரத்துறை தெரிவித்துள்ளது. ஆனால், 14ஆவது மக்களவையின் போது தொடங்கப்பட்ட 208 வங்கிக் கணக்குகள் இன்னும் முடிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS