ஜிஎஸ்டி விளம்பரத்துக்கு மத்திய அரசின் செலவு எவ்வளவு தெரியுமா..?


ஜிஎஸ்டி தொடர்பான விளம்பரங்களுக்கு அரசு 132 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

ஜிஎஸ்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு எவ்வளவு செலவு செய்துள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது. அதற்கு மத்திய தகவல் ஒளிபரப்புதுறை அமைச்சகம் அளித்துள்ள பதிலில், அச்சு ஊடகத்தில் ஜிஎஸ்டி குறித்த விளம்பரங்களுக்கு 126 கோடியே 93 லட்சம் ரூபாய் செலவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னணு ஊடகங்களில் செலவு செய்யப்படவில்லை என்றும் மற்ற வழிகளில் செய்யப்பட்ட விளம்பரங்களுக்கு 5 கோடியே 44 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டி குறித்து அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு நாளிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் வாயிலாக விளம்பரங்களை வெளியிட்டது.

POST COMMENTS VIEW COMMENTS