முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கார் மீது கல் வீச்சு


மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் கல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிதி மாவட்டத்தில் மக்களை நேரில் சென்று சந்திக்கும் யாத்திரை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், பாதுகாப்பு படையினர் சூழ வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சர்ஹட் தொகுதியில் அவரது வாகனம் சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் கார் மீது கற்களை வீசினர். இதில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் தொகுதியில் முதலமைச்சரை குறிவைத்து தாக்குதல் நடந்துள்ளதாக அம்மாநில பாஜகவினர் தெரிவித்துள்ளனர். ஆனால், பாஜகவின் குற்றச்சாட்டுக்கு எதிர்க் கட்சியினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS