உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் ரஞ்சன் கோகாய்


உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி ரஞ்சன் கோகாய் நியமிக்கப்பட உள்ளார். இதற்கான பரிந்துரையை தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சட்ட அமைச்சகத்திடம் முறைப்படி அளித்துள்ளார்.

தீபக் மிஸ்ரா வரும் அக்டோபர் 2-ம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள ரஞ்சன் கோகாய் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆக பதவி ஏற்பார். இவர் அடுத்தாண்டு நவம்பர் மாதம் வரை பதவியில் இருப்பார்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த ரஞ்சன் கோகாய் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் கேஷப் சந்திர கொகோயின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கோகாய் பின்னர் 2012-ல் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆனார்.

POST COMMENTS VIEW COMMENTS