பாகுபலியாக சிவராஜ் சிங் சவுகான்; வைரலாகும் வீடியோ !


பாகுபலி திரைப்படத்தின் காட்சிகளை, மத்தியப் பிரதேசத்தில் நடைபெறும் ஆட்சியுடனும் மகேந்திர பாகுபலியாக சிவராஜ் சிங் சவுகானையும்  ஒப்பிட்டு மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பரப்புரைக்கு வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. 


பாகுபலி திரைப்படத்தின் காட்சிகளை, மத்தியப் பிரதேசத்தில் நடைபெறும் ஆட்சியுடன் ஒப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. மகேந்திர பாகுபலியாக முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சித்தரிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மக்கள் அடிமைகளாக இருந்தார்கள் என்றும் அவர்களை மீட்டெடுக்க முதல்வர் சிவராஜ் சிங் செயல்படுவதாகவும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

சிவலிங்கத்தை தூக்கும் காட்சியில் சிவராஜ் சிங் சவுஹான் மக்களை அரவணைத்து காப்பது போலவும், இவரின் ஆட்சியை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்பி, ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் உள்ளிட்டோர் அதிசயித்து காண்பது போலவும் காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

Read Also -> பிரியா வாரியர் கண் சிமிட்டல் வழக்கு - உச்சநீதிமன்றம் தள்ளுபடி

            

இதில் கட்டப்பாவாக பிரதமர் நரேந்திர மோடி சித்தரிக்கப்பட்டுள்ளார். தாங்கள் இருக்கும் வரை என்னை யாரும் அசைக்க முடியாது என்று சிவராஜ் சிங் சவுகான் தெரிவிப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இறுதிக் காட்சியில் பல்வால் தேவனாக ஜோதிராதித்ய சிந்தியா, மகேந்திர பாகுபலியான சிவராஜ் சிங்குடன் போர் புரிவது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் பாகுபலி என்ற பெயரில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதத்தில் மத்தியப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி இந்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.


 

POST COMMENTS VIEW COMMENTS