பணமதிப்பிழப்பால் பணக்காரர்களுக்கே பயன் : ராகுல்காந்தி குற்றச்சாட்டு


மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டில் பணக்காரர்கள் மட்டுமே பயனடைந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ராகுல்காந்தி டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, பணமதிப்பு நீக்கம் என்பது பிழையல்ல, அது இந்திய பொருளாதாரத்தின் மீதான தாக்குதல் என விமர்சித்தார். பணக்காரர்கள் தங்களின் கறுப்புப் பணத்தை மாற்றிக் கொள்ளவே மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கை உதவியுள்ளதாக கூறினார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க பிரதமர் மோடி தயங்குவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். 

பணமதிப்பு நீக்க நடவடிக்கை பிர‌தமர் மோடியின் நண்பர்களுக்கு உதவியாக இருந்துள்ளது என சாடினார். மோடி அரசின் நடவடிக்கையால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். தொழிலதிபர் அனில் அம்பானிக்கும் நரேந்திர மோடிக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து அறிய நாடு முழுவதும் எதிர்பார்ப்பு நிலவுவதாக தெரிவித்தார். பணமதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வியடைந்தது குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

POST COMMENTS VIEW COMMENTS