ஒரே நாடு; ஒரே தேர்தல் முறையை அமல்படுத்தலாம்: சட்ட ஆணையம்


ஒரே நாடு; ஒரே தேர்தல் என்ற முறையை அமல்படுத்தலாம் என சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்திற்கும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது மத்திய பாஜக அரசின் நிலைப்பாடு. இதன்மூலம் தேர்தல் செலவீனங்கள் குறையும் என்ற கருத்தை அரசு தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியும் கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்தே இதனை வலியுறுத்தி வருகிறார். ஆனால் இதற்கு இன்னும் முழுமையான ஒப்புதல் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஒரே நாடு; ஒரே தேர்தல் என்ற முறையை அமல்படுத்தலாம் என சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது ஜம்மு காஷ்மீர் தவிர மற்ற அனைத்து மாநில சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் பொதுமக்களின் பணம் மிச்சமாகும் என தெரிவித்துள்ளது. இதன்மூலம் அரசாங்கம் கொள்கைகளை சிறப்பாக செயல்படுத்த முடியும் எனவும் சட்ட ஆணையம் கூறியுள்ளது. அதேசமயம் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது என்பது அரசியல் சாசனப் பிரிவு 172-ஐ திருத்தம் செய்யாமல் சாத்தியம் இல்லை எனவும் சட்ட ஆணையம் கூறியுள்ளது. இதுதொடர்பான மாநில அரசின் கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படும் எனவும் சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS