ஹரிகிருஷ்ணா மரணம் - போலீஸ் விளக்கம்


மறைந்த ஆந்திர முதலமைச்சர் என்.டி.ஆரின் மகனும் நடிகருமான ஹரிகிருஷ்ணா சீட் பெல்ட் அணியாததே கார் விபத்தில் பலியானதற்கு காரணம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவின் மகனும் நடிகருமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா நேற்று நெல்லூரில் ரசிகரின் திருமணத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பும்போது நல்கொண்டா அருகே அவரது கார் சாலைத்தடுப்பில் வேகமாக மோதி கவிழ்ந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ஹரிகிருஷ்ணா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஹரிகிருஷ்ணாவின் உயிர் மருத்துவமனையில் பிரிந்தது. 

                

இது குறித்து விசாரணை மேற்கொண்ட ஐதராபாத் காவல்துறையினர், ஹரிகிருஷ்ணா சீட் பெல்ட் அணியாததே காரணம் என அறிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும் கார் ஓட்டும் போது சாலையில் வளைவு இருப்பதை கவனிக்காமல் தண்ணீர் கேட்டு ஹரிகிருஷ்ணா திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது கார் அவரது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் தடுப்பில் மோதியதாகவும் இந்த வேகத்தில் காரின் கதவு திறந்ததால் அவர் வெளியே தூக்கி வீசப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். அவருடன் பயணித்த மற்ற இருவரும் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS