ரபேல் ஒப்பந்தத்தில் காங்கிரஸ் பொய் கூறுகிறது-  அருண் ஜெட்லி 


ரபேல் போர் விமான ஒப்பந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் பொய்யைத் திரும்பத் திரும்ப கூறி வருவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

ரபேல் ‌ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய 15 கேள்விகளுக்கு பதிலளித்துள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஒப்பந்தம் செய்தபோது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தேசப் பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். 2007ல் காங்கிரஸ் கூட்டணி அரசு செய்த ஒப்பந்தத்தைவிட 2015 இல் இப்போதைய அரசு ஏற்படுத்திய ஒப்பந்தம் சிறப்பானது என்றும் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் தொழிலபதிருக்கு சாதகமாக அரசு நடந்து கொண்டதாக கூறுவது முற்றிலும் தவறானது என்றும், ரபேல் போர் விமானத்தின் விலையை 520 கோடி, 540 கோடி மற்றும் 700 கோடி ரூபாய் என இடத்துக்கு இடம் ராகுல் காந்தி மாற்றி மாற்றிக் கூறுவதாகவும் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

Read Also -> பிம்ஸ்டெக் மாநாட்டிற்காக மோடி நேபாள பயணம்

                     

அதேபோல் ரஃபேல் போர் விமானங்கள் தொடர்பாக தம்மீது முன்வைக்கப்படும் குற்றச்ச்சாட்டுகளை மறுத்துள்ள தொழிலதிபர் அனில் அம்பானி, உண்மை மட்டுமே வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தம்மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது, துரதிருஷ்டவசமானது என கூறினார். குற்றச்சாட்டுகள் அனைத்து உள்நோக்கம்கொண்டவர்களாலும், தொழில்முறைப் போட்டியாளர்களாலும் பரவுவதாக தெரிவித்த அனில் அம்பானி, இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு தாம் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியிருப்பதாகவும் குறிப்பிட்டார். ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக அவபெயர் ஏற்படுத்தியதாக் 5000 கோடி ரூபாய் இழபீடு வழங்கக்கோரி அவர் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ராகுல் காந்தியை சேர்க்காதது ஏன் என செய்தியாளார்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்விதமாக பதிலளித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS