பிம்ஸ்டெக் மாநாட்டிற்காக மோடி நேபாள பயணம்


இரண்டுநாள் அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நாளை நேபாளத்துக்கு செல்கிறார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, 4-வது பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்க நேபாளம் நாட்டின் தலைநகர் காத்மாண்டுவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறியுள்ளார்.

நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தினங்கள் காத்மாண்டுவில் தங்கும் அவர், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இந்தியாவின் நட்புணர்வை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்கும் வங்கதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து நாட்டின் தலைவர்களை சந்தித்து பேசவுள்ளதாக கூறியுள்ளார். அமைதி மற்றும் வளர்ச்சி நோக்கி இப்பேச்சு வார்த்தை அமையும் என்றும் அறிக்கையில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS