திறந்தவெளியை கழிப்பறையாக்கினால் மரண தண்டனை: பதாகையால் பரபரப்பு


பொது இடத்தில் மலம் கழித்தால் மரண தண்டனை வழங்கப்படும் என வைக்கப்பட்ட விளம்பர பலகையால் சலசலப்பு ஏற்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலத்தை சோந்த பக்பட் நகராட்சியில் சுற்றுப்புற தூய்மையை வலியுறுத்தும் விதமாக பேனர் வைக்கப்பட்டிருந்து. அதில், பொது இடத்தில் மலம் கழித்தால் விரைவில் நீங்கள் கொல்லப்படுவீர்கள் என எழுதப்பட்டிருந்து. எனவே இந்த பேனருக்கு பல தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து பேனரை உருவாக்கிய டிசைனரின் தவறுதலால் இப்படி நிகழ்ந்துவிட்டதாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பக்பட் நகராட்சியின் நிர்வாக அதிகாரி கூறும்போது, சர்ச்சைக்குரிய பேனர் அகற்றுப்பட்டுவிட்டதாக தெரிவித்தார். திறந்த வெளியில் மலம் கழிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக  நகராட்சி முழுவதும் மொத்தமாக 45 பேனர்கள் வைக்கப்பட்டதாவும், அதில் தவறுதலாக ஒரே ஒரு பேனரில் மட்டும் இப்படி வாசகம் இடம்பெற்றுவிட்டதாகவும் கூறினார். இதற்கு டிசைனரின் தவறுதலே காரணம் எனக் கூறிய அவர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார்.

POST COMMENTS VIEW COMMENTS