மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது கொச்சி விமான நிலையம்


மழை வெள்ளத்தால் மூடப்பட்டிருந்த கொச்சி விமானநிலையம் இரு வாரங்களுக்குப்பின் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பெய்த வரலாறு காணாத கனமழைக்கு கொச்சி விமான நிலையமும் தப்பிவில்லை. வெள்ளத்தால் விமான நிலையத்தில் சுமார் 220 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 14-ம் தேதி கொச்சி விமான நிலையம் மூடப்பட்டது.

தற்போது வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பி உள்ளது. மேலும் சேதமடைந்த ஓடு பாதைகளை சீரமைக்கும் பணிகள் நிறைவுற்றதாலும் 15 நாட்களுக்குப்பின் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 2 மணி முதல், உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.

POST COMMENTS VIEW COMMENTS