வெறும் ரூ.13 ஆயிரம் கோடியை ஒழிக்கவா பணமதிப்பிழப்பு நடவடிக்கை? ப.சிதம்பரம் கேள்வி


வெறும் 13 ஆயிரம் கோடி ரூபாயை ஒழிப்பதற்காகவா பணமதிப்பு நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியது? என மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்திய ரிசர்வ் வங்கி பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி முடிந்துள்ளதாக அறிவித்துள்ளது. விநியோகிக்கப்பட்ட ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளில் ரூ.15 லட்சத்து 41 கோடி ரூபாயில், 15,310,73 கோடி ரூபாய் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றும் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின் 10,720 கோடி ரூபாய் பணம் வரவில்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு  பின் 99.3 சதவீத  நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளது என 2017-18ஆம் ஆண்டுக்கான இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில், ‘வெறும் 13 ஆயிரம் கோடியை ஒழிக்கவா நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரையும் இழந்து, பல நிறுவனங்களையும் மூட மத்திய அரசு பண மதிப்பிழப்பை அறிவித்தது? 13 ஆயிரம் கோடி பணமும் கூட நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளில் இருக்கலாம் அல்லது தொலைந்தோ, அழிக்கப்பட்டோ இருக்கலாம்’ என பதிவிட்டுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS