உடலை உறுதியாக்குங்கள் - மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்


மக்கள் விளையாட்டுக்கு முக்கியத்துவம் தருவதுடன் உடல் உறுதியை பேணிக் காக்கும் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். 

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தி விடுத்துள்ளார். அதில் நடப்பு 2018ம் ஆண்டு இந்திய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு சிறந்த ஆண்டாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். விளையாட்டு போட்டிகளில் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு மரியாதை செலுத்துவதாகவும் தன் செய்தியில் தெரிவித்துள்ளார். 

மக்கள் விளையாட்டுக்கு முக்கியத்துவம் தருவதுடன் உடல் உறுதியை பேணிக் காக்கும் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் மூலம் ஆரோக்கியமான இந்தியா உருவாகும் என்று கூறியுள்ளார். இந்திய ஹாக்கியின் பிதாமகன் என அழைக்கப்படும் தயான்சந்தின் பிறந்த தினமான ஆகஸ்ட் 29, தேசிய விளையாட்டு தினமாக அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

POST COMMENTS VIEW COMMENTS