16 நிமிடங்களில் விண்வெளிக்கு செல்லும் 3 இந்தியர்கள்  


மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விண்வெளிக்கு செல்பவர்கள் யார் என்பதை விதிகளுக்கு உட்பட்டு இந்திய விமானப்படை தேர்வு செய்யும் என்று கூறினார். ககன்யான் திட்டம் மூலம் இந்தியாவின் விஞ்ஞானம், தொழில்நுட்பம் வளர்ச்சி அடையும் என்று கூறிய சிவன், திட்டத்தினால் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

               

“2022-இல் கயான் ராக்கெட் மூலம் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளது. பிரதமர் மோடி இதற்கு சுதந்திர தின உரையில் உறுதி அளித்துள்ளார். 10,000 கோடி மதிப்பீட்டில் ராக்கெட் மூலம் மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 4ஆவது நாடு என்ற பெருமையை இந்தியா அடையவுள்ளது. இந்தத் திட்டத்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும்.  இந்த ராக்கெட் 16 நிமிடத்தில் விண்வெளியை சென்றடையும். 5-7 நாட்கள் விண்வெளியில் ஆய்வு மேற்கொள்ளும். 36 நிமிடத்தில் அரபிக்கடலுக்கு வந்தடையும்” என இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.

POST COMMENTS VIEW COMMENTS