சத்தமில்லாமல் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை


பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் ஏற்றம் கண்டு வருகிறது. பெட்ரோல் விலை இன்று காலை நிலவரப்படி லிட்டருக்கு 81 ரூபாய் 09 காசுகளாகவும், டீசல் விலை, லிட்டருக்கு 73 ரூபாய் 54 காசுகளாகவும் உள்ளது. 

பெட்ரோல், டீசல் விலை உயர்வு பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் காலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி நிலவரப்படி, ஒரு லிட்டர் டீசல் விலை, 62 ரூபாய் 90 காசுகளாக இருந்தது. பிப்ரவரி 1 ஆம் தேதி 67 ரூபாய் 62 காசுகளாகவும், மார்ச் 1 ஆம் தேதி 65 ரூபாய் 63 காசுகளாகவும் இருந்தது. ஏப்ரல் 1 ஆம் தேதி 68 ரூபாய் 12 காசுகளாகவும், மே 1 ஆம் தேதி 69 ரூபாய் 56 காசுகளாகவும் இருந்தது. ஜூன் 1 ஆம் தேதி நிலவரப்படி, ஒரு லிட்டர் டீசல், 73 ரூபாய் 06 காசுகளாகவும், ஜூலை 1 ஆம் தேதி 71 ரூபாய் 12 காசுகளாகவும் இருந்தது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி 71 ரூபாய் 62 காசுகளாகவும், ஆகஸ்ட் 28 ஆம் தேதி 73 ரூபாய் 54 காசுகளாகவும் இருந்தது. டீசல் விலை கடந்த 8 மாதங்களில் லிட்டருக்கு 10 ரூபாய் 64 காசுகளாக உயர்ந்துள்ளது.

பெட்ரோல் விலையை பொறுத்தவரை ஜனவரி 1 ஆம்‌ தேதி ஒரு லிட்டர் 72 ரூபாய் 53 காசுகளாக இருந்தது. பிப்ரவரி 1 ஆம்தேதி 75 ரூபாய் 77 காசுகளாகவும், மார்ச் 1 ஆம்தேதி 74 ரூபாய் 21 காசுகளாகவும் ஏப்ரல் 1 ஆம் தேதி 76 ரூபாய் 48 காசுகளாகவும் இருந்தது. மே 1 ஆம் தேதி 77ரூபாய் 43 காசுகளாகவும், ஜூன் 1‌ ஆம் தேதி 81 ரூபாய் 28 காசுகளாகவும் இருந்த பெட்ரோல் விலை, ஜூலை 1 ஆம்தேதி 78 ரூபாய் 40 காசுகளாகவும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி 79 ரூபாய் 26 காசுகளாகவும் இருந்தது. ஆகஸ்ட் 28 ஆம் தேதி நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 81 ரூபாய் 09 காசுகளாக இருக்கிறது. கடந்த 8 மாதங்களில் பெட்ரோல் விலையில் 8 ரூபாய் 56 காசுகள் வரை அதிகரித்துள்ளது.

‌மற்ற மெட்ரோ நகரங்களை ஒப்பிடும்போது டெல்லியில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருக்கிறது. விற்பனை வரி அல்லது வாட் வரி குறைவால் இந்த விலை குறைவாக இருக்கிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதலே பெட்ரோல், டீசல் விலையில் உயர்வு அதிகரித்து வருவதாக வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

POST COMMENTS VIEW COMMENTS