பாஜக முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை


பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

பாஜகவின் ஆலோசனைக்கூட்டம் இன்று டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் பாஜகவை சேர்ந்த முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் மற்றும் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர், கலந்துகொள்ளவிருக்கின்றனர். கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழல் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உள்ளிட்ட மாநிலங்களுக்கு நடைபெறவுள்ள தேர்தல் குறித்தும், அதைத்தொடர்ந்து அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்படும் எனத்தெரிகிறது. மேலும் பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு பிரதமர் ஆலோசனை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

POST COMMENTS VIEW COMMENTS