ஆளில்லா குட்டி விமானங்களுக்கு கட்டுப்பாடுகள் - மத்திய அரசு


ட்ரோன் (DRONE) எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களை பயன்படுத்துவது தொடர்பாக புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்த புதிய முறைகளின்படி, ட்ரோன்கள் பகல் நேரத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இவற்றை பார்வை
வரம்பு தொலைவுக்கு அதாவது 450 மீட்டர் உயரத்தில் மட்டுமே இயக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரோன்களை உரிய
அரசு அமைப்பிடம் பதிவு செய்து பதிவெண்ணை பெறுவதும் அவசியம் என விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. 

விமான நிலையங்கள், கடலோர பகுதிகள், சர்வதேச எல்லை, மாநில தலைமைச் செயலகங்கள், அரசு மற்றும் ராணுவ முக்கியத்துவம்
வாய்ந்த இடங்கள் என குறிப்பிட்ட சில பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ட்ரோன்கள் மூலம் உணவுப்
பொருட்கள், வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. பாதுகாப்பு, மருத்துவம்,
விவசாயம், பேரிடர் மீட்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ட்ரோன்கள் எனப்படும் குட்டி விமானங்களின் பயன்பாடு அண்மைக்காலமாக
அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

POST COMMENTS VIEW COMMENTS