நேரு அருங்காட்சியகத்தை மாற்ற வேண்டாம் : மன்மோகன் கடிதம்


நேரு அருங்காட்சியகத்தை மாற்ற வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் தலையிடுவதில் இருந்து அரசு விலகியிருக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு மன்மோகன் சிங் எழுதியுள்ள கடிதத்தில், தீன் மூர்த்தி வளாகத்தில் தலையிடாமல் இருப்பது, வரலாற்றுக்கும் நமது கலாசாரத்துக்கும் அளிக்கும் மரியாதையாகும் என்று கூறியுள்ளார்.

காங்கிரசுக்கு மட்டும் நேரு சொந்தமானவரல்ல, நாட்டுக்கே சொந்தமானவர் என்ற அடிப்படையில் இந்தக் கடிததத்தை எழுதுவதாக மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார். நேரு நினைவு அருங்காட்சியகமாக உள்ள தீன் மூர்த்தி வளாகத்தை அனைத்து முன்னாள் பிரதமர்களின் நினைவு வளாகமாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், பிரதமருக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS