ரக்‌ஷா பந்தன் : பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்


ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டத்தை முன்னிட்டு உத்தரப்பிரதேசத்தில் பெண்கள் இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்யலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வட மாநில மக்கள் சகோதரத்துவத்தை போற்றும் வகையில் இன்று ரக்ஷா பந்தன் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இதனையொட்டி உத்தரப்பிரதேசத்தில் உள்ள பெண்கள் அம்மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருக்கும் தங்களின் சகோதரர்களை காணும் வகையில் இன்று ஒருநாள் மட்டும் பேருந்தில் இலவச பயணம் செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோரக்பூரில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேருந்தின் இலவச பயணத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார். இன்று நள்ளிரவு 12 மணி வரை இலவச பயணம் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS