ரூ.5 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு ! காங்கிரஸ் மீது ரிலையன்ஸ் வழக்கு 


ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் 5 ஆயிரம் கோடி நஷ்டஈடு கோரி, காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான பத்திரிகை மீது ரிலையன்ஸ் நிறுவனம் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் செய்வதற்கு 10 நாட்களுக்கு முன்புதான் ரிலையன்ஸ் பாதுகாப்பு நிறுவனத்தை அனில் அம்பானி தொடங்கினார் என்ற தலைப்பில், காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகை, செய்தி வெளியிட்டிருந்தது. ரிலையன்ஸ் நிறுவனம் ஆதாயம் அடையும் நோக்கில், அரசு இந்த ஒப்பந்தத்தை செய்துள்ளதாகவும் கூறப்பட்டிந்தது. 

இந்த நிலையில், அந்தப் பத்திரிகையில் வெளியான தகவல் தவறானது என ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனில் அம்பானி, அகமதாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தங்கள் நிறுவனத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 5 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடுமாறும் மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு தொடர்பாக அடுத்த மாதம் 7ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு, நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS