சிரோமணி அகாலி தள தலைவர் மீது கலிபோர்னியாவில் தாக்குதல்!


அமெரிக்காவில் சிரோமணி அகாலி தள தலைவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிரோமணி அகாலி தள தலைவர் மன்ஜித் சிங் ஜிகே. இவர் டெல்லி சீக்கிய குருத்வாரா கமிட்டி உறுப்பினராகவும் இருக்கிறார். இவர் தனது குடும்பத்தினருடன் சீக்கிய விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்குள்ள குருத்வாரா ஒன்றில் வழிபாடு நடத்திவிட்டு வெளியே வந்த அவரை, காளிஸ்தான் ஆதரவாளர்கள் சுமார் 25 பேர் சூழ்ந்துகொண்டு தாக்கினர். இதில் அவர் பலத்த காயமடைந்தார். இவர், கடந்த 21-ம் தேதி நியூயார்க்கில் தாக்கப்பட்டார்.

இதுபற்றி மன்ஜித் சிங் கூறும்போது, ‘குருத்வாராவின் கண்ணியத்தைக் கூட மதிக்காமல் சிலர் என்னை தாக்கினர். ஆபாசமாகவும் திட்டினார் கள். எனது ஆதரவாளர்களிடம் அமைதியாக இருங்கள், அவர்களிடம் எதுவும் பேச வேண்டாம் என்று கூறிவிட்டேன். கடவுளின் அருளால் நன்றாக இருக்கிறேன். இதுபோன்ற தாக்குதலால் எங்கள் பணிகளில் இருந்து பின்வாங்க மாட்டோம்’ என்று கூறியுள்ளார்.
தாக்கு தல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

POST COMMENTS VIEW COMMENTS