கேரளா வெள்ளத்தில் சிக்கிய 36 பேரை இன்னும் காணவில்லை..!


கேரளாவில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி முதல் பெய்த மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 265 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 36 பேரை இதுவரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநில பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இடுக்கி மாவட்டத்தில் மட்டும் 51 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 10 பேரை காணவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. திருச்சூரில் 43 பேர், எர்ணாகுளத்தில் 38 பேர், ஆலப்புழாவில் 34 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் முக்கிய சான்றிதழ்களையும் ஆவணங்களையும் இழந்தவர்களுக்கு மீண்டும் அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள அரசு கூறியுள்ளது. இதற்காக மென்பொருளை உருவாக்கும் பணியும் நடந்து வருகிறது.

POST COMMENTS VIEW COMMENTS