மக்களவை தேர்தல்... 3 குழுக்களை அமைத்தார் ராகுல்காந்தி


மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகளை கவனிப்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 3 குழுக்களை அமைத்துள்ளார்.

ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட 9 மூத்த தலைவர்கள் அடங்கிய மைய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல ப.சிதம்பரம், சல்மான் குர்ஷித், சசி தரூர், சாம் பிட்ரோடா, மீனாட்சி நடராஜன், உள்ளிட்ட 19 உறுப்பினர்கள் கொண்ட தேர்தல் அறிக்கை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இவை தவிர ஆனந்த் சர்மா, திவ்யா ஸ்பந்தனா உள்ளிட்ட 13 பேர் கொண்ட விளம்பர குழுவும் அமைக்கப்படுவதாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS