விஜய் மல்லையாவுக்கான சிறை அறையின் வீடியோ: லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல்


தொழிலதிபர் விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்ட பிறகு அவர் அடைக்கப்படவுள்ள மும்பை சிறையின் வீடியோவை லண்டன் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் இருந்து பெற்ற 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்தாமல் விஜய் மல்லையா லண்டனில் தஞ்சமடைந்துள்ளார். இதனையடுத்து வங்கிகளின் சார்பாக லண்டன் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது மல்லையா நாடு கடத்தப்பட்டால் மும்பை சிறையில் அடைக்க வாய்ப்புள்ளதாக இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால், இந்திய சிறையில் போதிய வெளிச்சம் உள்ளிட்ட வசதிகள் இருக்காது என்று மல்லையா தரப்பில் ஆட்சேபம் கூறப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி, மல்லையா அடைக்கப்படவுள்ள சிறையை வீடியோ எடுத்து சமர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதன்படி ஆர்தர் சாலை சிறையை, சிபிஐ வீடியோ எடுத்து லண்டன் நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது. அதில் 12ஆம் எண் அறையில் போதிய வெளிச்சம் வருவது, தனியாக கழிவறை, தொலைக்காட்சி பெட்டி, சுத்தமான படுக்கை, தலையணை போன்றவை இருப்பது போன்றவை வீடியோவில் உள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS