வாக்காளர் பட்டியலுக்கு வந்த மான், புறா, யானை மற்றும் சன்னி லியோன்!


புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில், வாக்காளர்களின் புகைப்படங்களுக்கு பதிலாக சன்னி லியோன், மான், புறா, யானை புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2019 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன், புதிய வாக்காளர் பட்டியலை வெளியிடும் பணி அனைத்து மாநிலங்களிலும் நடந்து வருகிறது. உத்தரபிரதேச மாநிலத்திலும் வாக்காளர் பட்டியல் சரி பார்க்கப்பட்டு இணைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், 51 வயது துர்காவதி என்ற பெண்ணின் படத்துக்கு பதில் கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் படம் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் நாரத் ராய் பெயருக்கு அருகில் யானையின் படமும், குன்வார் அன்குர் சிங் என்பவரின் புகைப்படத்துக்கு பதில் மான் படமும், இன்னொருவரின் பெயருக்கு அருகில் புறா படமும் இடம்பெற்றுள்ளது. வாக்காளர்களின் படங்களுக்கு பதில் விலங்கு மற்றும் பறவைகளின் படம் இடம்பெற்றுள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கேட்ட போது, ’இந்த தவறை செய்த டேடா என்ட்ரி ஆபரேடர் விஷ்ணுதேவ் வர்மா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த தவறுகள் சரி செய்யப்படும்’ என்றார். 

POST COMMENTS VIEW COMMENTS