’ஆதார் அடையாளத்தை உறுதிப்படுத்த புகைப்படம் கட்டாயம்' : யூஐடிஏஐ தகவல்


ஆதாரை கொண்டு ஒருவரின் அடையாளத்தை உறுதி செய்யும் போது கைரேகை மட்டுமின்றி, புகைப்படமும் எடுக்க வேண்டும் என தேசிய அடையாள அட்டை ஆணையம் (UIDAI) தெரிவித்துள்ளது.

சிம்கார்டுகள் வாங்குதல், வங்கிச் சேவைகள் என பல்வேறு சேவைகளுக்கு அடையாள ஆவணமாக ஆதார் தகவல்கள் கேட்கப்படுகின்றன. பொதுவாக ஆதார் அடையாளங்களை உறுதிப்படுத்த கை ரேகைகளே பெறப்படுகின்றன. ஆனால், சம்பந்தப்பட்ட நபரை புகைப்படம் எடுத்து அதுவும் பொருந்திப் போகிறதா என்பதை காண வேண்டும் என தேசிய அடையாள அட்டை ஆணையம் தெரிவித்துள்ளது. 

 


 

இதற்காக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு இவ்வாணையம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஆதார் தகவல்களை உறுதிப்படுத்தும் போது புகைப்படம் எடுப்பதை கட்டாயமாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் அது தண்டனைக்குரிய குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வயதானவர்கள், விவசாயிகள் போன்றோர் கை ரேகைகளை உறுதிப்படுத்துவதில் அடிக்கடி சிக்கல் ஏற்படுவதால், புகைப்படத்தை கொண்டு தகவல்களை உறுதிப்படுத்துவது அந்த சிக்கலை போக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


 

POST COMMENTS VIEW COMMENTS