மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் - பிரதமர் மோடி


தூய்மை இந்தியா திட்டம் போன்ற திட்டங்கள் 70 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டிருந்தால் இந்திய இந்நேரம் நோயற்ற நாடாகி இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

குஜராத்தில், ஒரு புதிய மருத்துவமனை உள்ளிட்டவற்றை கட்டங்களை நேற்று பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். பின்னர் ஜுனகாத்தில் நடைபெற்ற பொது கூட்டம் ஒன்றில் பேசிய அவர், இந்தியாவை சுகாதாரம் மிக்க நாடாக மாற்றும் குறிக்கோளுடன் தூய்மை இந்தியா போன்ற திட்டங்களை அமல்படுத்துவதாக கூறினார். ஆனால் இதைச்செய்யும் தம்மைப்பார்த்து எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்வதாக தெரிவித்தார். 

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை ஒன்றை மேற்கோள் காட்டீய பிரதமர் சுத்தத்தை உறுதி செய்வதன் மூலம் மட்டுமே 3 லட்சம் சிறுவர்களின் உயிரை காப்பாற்றியிருக்கலாம் என தெரிவித்தார். மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஒன்று வீதம் மருத்துவ கல்லூரிகள் தொடங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், படிப்படியாக ஒரு மாவட்டத்திற்க்கு ஒரு மருத்துவ கல்லூரி இருக்கும்படி அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

POST COMMENTS VIEW COMMENTS