குமாரசாமி கணக்கர் வீட்டில் வருமானவரி சோதனை


கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியின் கணக்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியின் கணக்கரான எச்.பி. சுனில் என்பவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூருவின் மேற்கு குமாரா பூங்காவில் இருக்கும் சுனிலின் வீடு மற்றும் அலுவலங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 

               

Read Also -> செல்போன் உற்பத்தியில் இந்தியா 2வது இடம்

கடந்த மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக சுனில் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். பட்டய கணக்காளரான சுனில், குமாரசாமிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நம்பிக்கையானவராக இருந்து வருவதாக கூறப்படுகிறது. குமாரசாமியின் மனைவி அனிதா மற்றும் மகன் நிகில் ஆகியோரின் சொத்துக்களையும் சுனில் கவனித்து வருகிறார். இதேபோல குமாரசாமியின் உதவியாளர் ஒருவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS