பிரதமர் மோடி நாளை குஜராத் பயணம்


பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி நாளை குஜராத் செல்கிறார்.

குஜராத்தில் தயார் நிலையில் உள்ள நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ள மோடி, அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஒரு லட்சம் வீடுகளை 26 மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு வழங்குகிறார். மேலும் நலத்திட்ட உதவிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு வேலைவாய்ப்புக்கான கடிதம், சான்றிதழ்கள் உள்ளட்டவற்றை பிரதமர் மோடி வழங்க உள்ளார். 

இதற்கிடையில் வல்சாத் மாவட்டத்தில் உள்ள ஜூஜ்வா கிராமத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் அவர், காந்திநகரில் உள்ள குஜராத் தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS