அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 4 பேர் உயிரிழப்பு


மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் நால்வர் உயிரிழந்தனர்.

கிழக்கு தாதர் பகுதியில் ஹிந்த்மாடா திரையரங்கு அருகே அமைந்துள்ள கிரிஸ்டல் டவர் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்துவந்த 20 தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டன.

Read Also -> ஒருவர் கூட பாஸ் இல்லை.. தேர்வு எழுதிய அனைவரும் தோற்றதால் அதிர்ச்சி...!

இரண்டு டாங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. தீ விபத்து காரணமாக குடியிருப்பின் மாடிப்படி பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தீவிபத்தில் சிக்கியவர்கள் கிரேன்கள் மூலம் மீட்கப்பட்டனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட 16 பேர் கேசிஎம் என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் வயதான பெண் ஒருவர் உட்பட நால்வர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். மற்றவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக கேசிஎம் மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS