ஒருவர் கூட பாஸ் இல்லை.. தேர்வு எழுதிய அனைவரும் தோற்றதால் அதிர்ச்சி...!


கோவா மாநிலத்தில் கணக்கர் பணிக்காக தேர்வு எழுதிய பத்தாயிரத்து 815 பேரும் தோல்வியடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணக்குகள் துறை இயக்குனரகம் சார்பில் கோவா அரசின் பல்வேறு துறைகளில் 80 கணக்கர்கள் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. குறைந்தபட்சமாக 35 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி என்ற விதிமுறைப்படி தேர்வு நடத்தப்பட்டது.

இந்நிலையில் தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் தேர்வு எழுதிய பத்தாயிரத்து 815 பேரில் ஒருவர் கூட தேர்ச்சிபெறவில்லை என கணக்குகள் துறை இயக்குனரகத் தலைவர் பிரகாஷ் பெரேரா தெரிவித்துள்ளார். கடினமான கேள்விகள் கேட்கப்படவில்லை என்றும் இருந்த போதிலும் போட்டியாளர்கள் தேர்ச்சி பெறாதது வருத்தமளிப்பதாக பிரகாஷ் பெரேரா தெரிவித்துள்ளார். இதனால் கோவா அரசு கணக்கர்களுக்கான தேர்வு தேதி மீண்டும் அறிவிக்கப்படும் என கணக்குகள் துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS