வெள்ளத்துக்கு காரணம் யார் ? - தொடங்கிய அரசியல்


கேரள வெள்ளத்தில் 300க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். 3 லட்சம் பேர் வீடு, உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். கேரளவை மீண்டும் கட்டமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியிருக்கின்றன. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சரும், எதிர்கட்சி தலைவரும் ஒருங்கே சென்று பார்வையிட்டனர். மீட்பு களங்களில் கட்சி பேதமின்றி ஈடுபட்டனர். சமூக வலைத்தளங்களில் அவையெல்லாம் பாரட்டப்பட்டது. 

Read Also -> கேரளாவில் தொற்று நோய்கள் ஏற்படவில்லை -ஜே.பி.நட்டா

வெள்ளம் வடிந்து, மறுசீரமைப்பு தொடங்கியுள்ள நிலையில் , கேரள மாநில எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா அரசின் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இது ஒரு மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரிடர் என தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் “கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக்கு முழுக்க முழுக்க அரசே காரணம், அணைகளை முறையாக மேலாண்மை செய்யாமல், ஒரே நேரத்தில் திறந்துவிட்டு இவ்வளவு பெரிய பேரிடரை நிகழ்த்தியிருக்கிறார்கள், நீதி விசாரணை நடத்தி, காரணமானவர்களை தண்டிக்க வேண்டும்” என்றா 

POST COMMENTS VIEW COMMENTS