மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ் நீக்கம்?: பிரகாஷ் ஜவடேகர் மறுப்பு


தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா போன்ற பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற வேண்டுமானால் சிபிஎஸ்இ சார்பில் நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் (சி.டி.இ.டி) தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில் தேர்விற்கான மொழித் தேர்வில் இருந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, பெங்காலி உள்ளிட்ட 17 மொழிகளை மத்திய அரசு நீக்கியுள்ளதாக தகவல் வெளியானது. கடந்த ஆண்டு வரை மொத்தமாக 20 மொழிகளில் தேர்வு எழுதும் வசதி இருந்த நிலையில் தற்போது அதில் இருந்து தமிழ் உள்பட 17 மொழிகள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதற்கு தேர்வர்கள் மத்தியில் கடும் அதிருப்தியும் எழுந்தது.

இந்நிலையில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். தமிழ் உள்ளிட்ட மொழிகள் நீக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கும் அவர் மறுப்பு தெரிவித்தார்.

POST COMMENTS VIEW COMMENTS