புதிய ரூ.2000த்திலும் கள்ள நோட்டு....4 பேர் கைது 


கத்தை கத்தையாக 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் வைத்திருந்த நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

1000 ரூபாய் நோட்டுகளை ஒழிப்பதன் மூலம் கள்ள நோட்டை தடுக்க முடியும் என்று புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வந்தன. ஆனால் அதிலும் கள்ள நோட்டுகள் புழக்கத்திற்கு வரத்தொடங்கியுள்ளன. 
மேற்கு வங்கத்தில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை போலவே கள்ள நோட்டுக்களை வைத்திருந்த நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து  9,10,000  ரூபாய் மதிப்பிலான பணம் கத்தைக் கத்தையாக கைப்பற்றப்பட்டுள்ளது. அந்தப் பணம் தோற்றத்தில் அப்படியே புதிய 2 ஆயிரம் நோட்டுக்களை போலவே இருந்ததைக் கண்டு கொல்கத்தா போலீஸார் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
 
 

POST COMMENTS VIEW COMMENTS