காந்தி படம் இல்லாமல் வெளியான 2000 ரூபாய் நோட்டு..!


மத்தியப் பிரதேசத்தில் காந்தி படம் இல்லாத 2000 ரூபாய் நோட்டு வெளியாகி உள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் சொபூரில் விவசாயி ஒருவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக அங்குள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்றுள்ளார். ஆனால் வங்கியில் இருந்து 2,000 நோட்டை பெற்ற விவசாயிக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. காரணம், அந்த ரூபாய் நோட்டில் காந்தி படமே இல்லை. உடனடியாக சுதாரித்துக் கொண்ட விவசாயி இது குறித்து வங்கியில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அந்த எஸ்பிஐ வங்கியின் அதிகாரி கூறுகையில், இது கள்ள நோட்டு கிடையாது எனவும், ரூபாய் நோட்டில் அச்சுப்பிழை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து ரிசர்வ் வங்கிக்கு புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கிலே புதிய ரூபாய் நோட்டுகள் வெளியானது. ஆனால் அந்த ரூபாய் நோட்டுகளிலே காந்தி படம் இல்லாதது பொதுமக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS