ஜிகா வைரஸ் குறித்து தமிழக மக்கள் பயப்படத் தேவையில்லை:சுகாதாரத் துறை செயலாளர்


ஜிகா வைரஸ் தமிழகம் உட்பட இந்தியாவில் எங்கும் பரவாத காரணத்தால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இந்த வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரேசில் உள்ளிட்ட 22 நாடுகளில் இந்த வைரஸ் பெருமளவில் பரவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜிகா வைரஸ் கர்ப்பிணி பெண்களை அதிகளவில் தாக்குவதால் கர்ப்பிணி பெண்கள் இங்கிருந்து பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலைய அதிகாரிகளின் ஒத்துழைப்போடு சுகாதாரத்துறை மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் ஜிகா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS