குழந்தை வளர்ப்பு தந்திரம்! அறிந்து கொள்வோமா?


குழந்தை என்பது ஓர் வரப்பிரசாதம். ‘எந்த பிள்ளையும் நல்ல பிள்ளை தான் மண்ணில் பிறக்கையிலே!அது நல்லவனாவதும் கெட்டவனாவதும் அன்னை வளர்ப்பினிலே!’என்ற வரிகளுக்கேற்ப குழந்தை வளர்ப்பு ஒரு கலை அதில் உள்ள பல தந்திரங்கள் பற்றி காண்போம்.

* எந்த வயது குழந்தையையும் திட்டவோ, அடிக்கவோ கூடாது. குழந்தை கடவுள் கொடுத்த வரம் அதனால் குழந்தையின் மனதை உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ துன்புறுத்த கூடாது.

* ஆபத்து விளைவிக்கும் பொருட்களை குழந்தை கைக்கு எட்டும்படி வைக்க கூடாது.

* குழந்தைகளுக்கு உறவுகளின் அருமையை சிறு வயதிலிருந்தே கற்றுக்கொடுக்கவேண்டும்.

* அவர்களின் சிறு சிறு வேலைகளை அவர்களே செய்து கொள்ளும்படி பழக்க வேண்டும். இதனால் பொறுப்புணர்வு எழும்.

* குழந்தைகளுக்கு முன் சண்டை போட்டுகொள்வதை நிறுத்த வேண்டும். நாமே, நம் குழந்தைக்கு முன் உதாரணம் என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.

* விட்டுகொடுக்கும் பழக்கத்தையும், விருந்தோம்பல் பண்பையும் கற்று கொடுக்க வேண்டும்.

* மற்றவர்களின் நல்ல குணங்களை மட்டுமே குழந்தையிடம் எடுத்துரைக்க வேண்டும். தாழ்த்தி கூறுதல் கூடாது.

* பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கும் பழக்கத்தை கற்று கொடுக்க வேண்டும். அதற்கு குழந்தை முன் பெரியோரை பெற்றோர்கள் திட்ட கூடாது.

* சிறு சிறு வீட்டு வேலைகளை செய்யும் படி குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

* நம் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு பேச கூடாது. அது தாழ்வு மனப்பான்மையை உண்டு பண்ணும்.

* மற்றவர்களுக்கு கொடுத்து உண்ணும் பழக்கத்தையும் உதவி செய்யும் பழக்கத்தையும் சொல்லி தர வேண்டும்.

POST COMMENTS VIEW COMMENTS