பூக்களுக்கும் உண்டு மருத்துவ குணம்! தெரிந்து கொள்வோமா?


சில பூக்கள் மருத்துவ குணம் அடங்கியவை அவற்றின் பலன்களை இங்கு காண்போம்.

ரோஜா பூ

ரோஜா பூ இதழ்களைக் உலர வைத்து கஷாயம் வைத்து குடித்தால் வாய்புண் குணமாகும்.

செம்பருத்தி பூ

செம்பருத்தி பூக்களை நீரில் காய்ச்சி அந்த காய்ச்சிய நீரை பாலுடன் கலந்து அருந்தி வந்தால் இதயம் பலப்படும்.

வில்வப் பூ

வில்வப் பூவின் இதழை வதக்கி இளம் சூட்டுடன் கண் இமைகளில் ஒற்றடம் கொடுத்தால் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான கண்வழி, கண் அரிப்பு, சிவந்து போதல் போன்ற பிரச்சனைகள் அகலும்.

மாம் பூ

மாம் பூவைக் காய வைத்துப் பொடி செய்து, தயிரில் கலந்து சாப்பிட்டால் ரத்த பேதி குணமாகும்.

ஆவாரம் பூ

உடலில் ஏற்படும் நமைச்சல் குறைய ஆவாரம் பூ மற்றும் பச்சைப்பயிறு இரண்டையும் அரைத்து குளித்தால் நமைச்சல் நீங்கும்.

வெங்காயப் பூ

வெங்காயப் பூவை நீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை காலை, மாலை என அருந்தி வந்தால் மாதவிடாய் பிரச்னை அகலும்.

வேப்பம் பூ

வேப்பம் பூவை வறுத்து போடி செய்து, உணவுடன் சேர்த்து கொண்டால் வாந்தி, ஜீரண பிரச்னை குணமாகும். குடல் கிருமிகள் நீங்கும்.

மருதாணி பூ

மருதாணி பூவை தலையணைக்கு அடியில் வைத்து படுத்தால் உடல் வெப்பம் குறையும்.

தூதுவளைப் பூ

தூதுவளைப் பூவை பாலுடன் சேர்த்துக் காய்த்து குடித்துவர ஆஸ்துமா பிரச்னை அகலும்.

வாகைப் பூ

வாகைப் பூவை அரைத்து தோலில் ஏற்பட்ட கட்டியில் பூசப்பட்டால் கட்டி உடைந்துவிடும்.

POST COMMENTS VIEW COMMENTS