பச்சை குத்திக் கொள்வதில் உள்ள சில சீக்ரட் டிப்ஸ்!


பண்டைய காலம் தொட்டே பச்சை குத்திக்கொள்ளும் பழக்கம் நம் கலாச்சாரத்தில் இருந்து வருகிறது. தற்போது சில இளைஞர்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் அதில் பல சந்தேகங்கள் உள்ளன? விகாஸ் மற்றும் மிக்கி மாலனி, உடல் கேன்வாஸ் பச்சை குத்தல்கள் இணை நிறுவனர்கள் கூறும் சில சீக்ரட் டிப்ஸ் இதோ!

* பச்சை குத்திக் கொள்வதால் இரத்த தானம் செய்ய முடியாது என்ற தவறான கருத்து உள்ளது ஆனால் உண்மை என்னவென்றால் பச்சை குத்திக் கொண்ட முதல் மூன்று மாதங்களில் தான் இரத்த தானம் செய்ய கூடாது. அதன்பின் இரத்த தானம் செய்யலாம்.

* பச்சை குத்திய அந்த நிறம் மங்காது என்று கூற முடியாது. அதற்கான தகுந்த பராமரிப்பு தேவை இல்லையேல் அதன் நிறம் மங்க தொடங்கி விடும். குறைந்தது ஒரு நாளுக்கு ஒரு முறையாவது உங்கள் பச்சையை ஈரப்பதமூட்டல் வேண்டும்.

* நம்மில் சிலருக்கு எழும் மிக பெரிய சந்தேகம் பச்சையை அகற்ற முடியாது என்பது தான் ஆனால் தற்போது லேசர் சிகிச்சை மூலம் இதை நீக்க முடியும். அந்த வடு பின்னால் மறைந்துவிடும்.

* பச்சை குத்திக் கொள்வதால் சிலருக்கு தோல் ஒவ்வாமை மற்றும் இரத்த நச்சு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

POST COMMENTS VIEW COMMENTS