உயிர் காக்கும் உறுப்பு தானம்... அறிந்து கொள்வோமா???


உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் போது தேவைப்படும் நோயாளிக்கு உதவ, இன்னொருவர் தனது உடல் உறுப்புகளில் ஒன்றை தானம் செய்வதே உறுப்பு தானம். உடல் உறுப்பு தானம் செய்வதில் முதலிடம் தமிழகத்திற்கே! இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சம் பேர் உடல் உறுப்பு கிடைக்காமல் மரணம் அடைகின்றனர்.

எந்த உறுப்புகளை தானம் செய்யலாம்?

சிறுநீரகம்,இதயம், கல்லீரல், நுரையீரல், கணையம், சிறுகுடலின் ஒரு பகுதி, இவை உறுப்பு தானம். மற்றும் கண்ணின் கருவிழி (கார்னியா), தோல், தசைநார், இதய வால்வு போன்ற திசுக்களை மட்டும் தானமாக பெற்று மற்றவருக்கு பொருத்துவது திசு கொடையாகும்.

* மனிதர்கள் தங்களது உடல் உறுப்பினை வணிக முறையில் விற்கவோ, வாங்கவோ, பேரம் பேசவோ, மிரட்டி அபகரிக்கவோ கூடாது.
* உடல் உறுப்பு தானம் செய்வதற்கு முன் உறுப்பு பொருந்துமா? என்று அரசின் உடல் உறுப்பு தான மையத்திடம் அனுமதி வாங்க வேண்டும்.
* இறந்த பின் உறுப்பு தானம் செய்வதால் சில உறுப்புகள் மட்டுமே தானமாக கொடுக்க இயலும். மேலும் உடலுக்கு உரிய மரியாதை செய்யபட மாட்டது.
* இறந்த பின் கண் தானம் செய்தால் உடலுக்கு செயற்கை கண் பொருத்தி தருவர். எலும்பு தானமாக கொடுக்க பட்டால், அதற்கு பதில் ராடு பொருத்தி தருவார்கள். இதனால் உடல் சிதைக்கபடுமோ என்ற அச்சமே வேண்டாம்.
* உடல் உறுப்பு ஆரோக்கியமின்றி இருந்தாலோ, கண் பார்வை மங்கி இருந்தாலோ உறுப்பு தானம் செய்வதில் பயன் இல்லை. உறுப்பின் தரம் மிக முக்கியம்.
* 60 - 70 வயதானவர்கள் உறுப்புகள் பழுதாகி இருக்கும் பட்சத்தில் அவற்றை தானமாக கொடுப்பது பலன் இல்லை. ஆரோக்கியமான உறுப்பாக இருந்தால் கண்டிப்பாக அவர்களின் உறுப்பை தானமாக அளிக்கலாம்.
* உடல் உறுப்பு செய்வதற்காக ஒருவரின் உடலை கண்டிப்பாக மருத்துவர் அலட்சிய படுத்தி உறுப்பு தானத்திற்கு பயன்படட்டும் என முடிவெடுக்க மாட்டார். இதற்கான விதிவிலக்கு மூளைச்சாவுக்கு மட்டுமே!

POST COMMENTS VIEW COMMENTS