அதீதப் பசியும் ஆபத்தே.... நூடுல்ஸ் போன்ற சீன உணவினால் வரும் விபரீதம்


நாகரீகம் என்ற பெயரில் நாம் உட்கொள்ளும் சீன உணவு வகைகள் மிகவும் ஆபத்தை விளைவிக்கின்றது.

சுவையைக் கூட்டுவதற்காக சீன உணவுகலான நூடுல்ஸ்சில் மோனோசோடியம் அதிகமாக சேர்க்கப்படுகிறது. இதுப் பசியைத் தூண்டிவிடுவதால் கலோரிகளின் அளவு கூடுகின்றது. இவை உடலுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன.

மேலும் நாம் உட்கொள்ளும் பிரெட்டில் உள்ள புரதம் பசியைப் போக்கி, வயிறு நிறைந்தது போன்ற உணர்வைத் தரும். உடன் உட்கொள்ளும் ஜாம் உடலில் சர்க்கரையின் அளவை அதிகரிப்பதால் இவை பசியை தூண்டுகின்றது. இதனால் உடல் பாதிக்கப்படுகிறது.

மது அருந்தியவர்கள் அப்படியே படுக்கக் கூடாது. அதற்குக் காரணம் ஆல்கஹால் குடித்ததும் பசி அதிகமாக இருக்கும். குடித்திருக்கும் போது ஒருவரால் 500 கலோரிகளுக்கு மேல் சாப்பிட முடியுமாம். இதனால் தான் மது அருதியவர்கள் அதிகமாக சாப்பிடவேண்டும் என்று கூறுகின்றனர்.

மேலும் சாக்லேட் கூட பசியைத் தூண்டுமாம். அதில் இருக்கும் கலோரிகளால் பசி அதிகரிக்குமாம். இவ்விதமாக அதீதப் பசி ஆபத்தை விளைவிக்கின்றது.

POST COMMENTS VIEW COMMENTS